வெள்ளி, 1 அக்டோபர், 2010


காசி ஆனந்தனின் நறுக்குகள்.

முரண்

இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
~நாயே! பன்றியே! குரங்கே!,

நாற்காலி
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

உலகமைதி
மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி

ஞானம்
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

அடி
கலையை கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்…
காலம் காலமாய்
பறையை பறயனை தாழ்த்திய நீ.

பாடம்
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி

கோயில்
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

காலம்
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.

கடற்கரை
உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரிய,டத்து மாடிகள்
இங்கேயே நோயோடும் நொடியோடும்
ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்

வெறி
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்…எரிந்ததுஅடுப்பல்ல-சேரி

இருள்
பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்…
எங்கேவெளிச்சம்?

வீரம்
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாலிக்கு தாஜ்மஹால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக