வெள்ளி, 1 அக்டோபர், 2010




இசையமைப்பு, பாடல் வரிகள், பாடியவர்: இளங்கவி


பல்லவி

பிஞ்சுகள் கருகிய நிலம்
புதை குழியெங்கும் பிணம்
அவலத்தின் உச்சம் பார்த்துவிட்ட
முள்ளிவாய்க்கால் பேரவலம்.....


சரணம் - 1

எங்கள் இதயத்தின் மூச்சு
உலகே கேட்கலையா...
ஒன்றாய் புதைந்த எங்கள் பிணம்
உங்கள் கண்களில் தெரியலையா...
ஏனிந்த மெளனம் கலையுங்கள்
எங்கள் இனத்தைக் காத்திடுங்கள்
இல்லாதிருந்தால் தமிழினமே
சரித்திரமின்றி அழிந்துவிடும்....


சரணம் -2

நாம் விழுந்திட மாட்டோம்
விழ விழ எழுந்திடுவோம்...
விடுதலை நோக்கி நம் பயணம்
தொடரும் இறுதிவரை தொடரும்..
தமிழீழம் பிறக்கும் நாளை
தமிழர் மனங்கள் மகிழும்....
அதுவரை வலிகள் எமது
வலிகள் நீங்கி எங்கே விடுதலை...


இடையிடையே INTERLUDE இல் போடப்பட்ட வசனங்கள்...



வீழாது எங்களினம் வீழாது என்றும்
ஓயாது எங்களினம் விடுதலையின்றி ஓயாது...
வீணாய் காலில் மிதிபட்டுச் சாக
எலிகள் என்று நினைத்தாயா...
கொடியிலும் வீரம் காட்டிப் பாயும்
புலியினம் எங்கள் கொடி தோழா....

முதலாவது சரணம் முடிவின் பின்னர் வரும் வரிகள்..

புதை குழியெல்லாம் பிணம்..
புதை குழியெல்லாம் பிணம்..
தமிழர் அழிந்த ஒரிடம்
முள்ளிவாய்க்கால் பேரவலம்....


இளங்கவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக